சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து!

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இரு ரயில்களும் மோதிக்கொண்டதில் இரண்டு பெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா நோக்கிச் சென்ற மைசூரு தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகே வந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் தீப்பற்றியுள்ளது.

பெட்டிகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ரயிலில் பயணித்த பயணிகள் பத்திரமாக வெளியேற்ட்டபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.