சம்மாந்துறை ஸம் ஸம் பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழாவும் கலை நிகழ்வும்

 

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-

சம்மாந்துறை உடங்கா 01 கிராமசேவகர் பிரிவில் மாணவர்களின் ஆரம்ப கல்வியை வெற்றிகரமாக செய்து வருகின்ற ஸம் ஸம் பகல் பராமரிப்பு பாலர் பாடசாலை மாணவச் செல்வங்களின் கலை நிகழ்வும்,, 2024ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்துள்ள மாணவர்களின் வித்தியாரம்ப ஏடு திறப்பு விழா   சம்மாந்துறை அல் அர்சத் தேசிய பாடசாலை கலாச்சார மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனீபா, அட்டாளைச்சேனை தேசியக் கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளர் கே. எல். எம். பர்ஷாத், சம்மாந்துறை அல் அர்சத் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ரஹீம்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ. சீ. எம். சஹீல் , மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.