சம்மாந்துறை பொலிஸ் நிலைய பல்வேறு முறைப்பாட்டு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு பிரியாவிடை

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாட்டு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம்.ஹசீப் பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

இவர் 37 வருட பொலிஸ் சேவையில் இலங்கையில் பல பாகங்களில் கடமையாற்றி இறுதியாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.