சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் புதிய சிற்றுண்டி சாலை திறந்து வைப்பு

சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “சிற்றுண்டி சாலை” நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத் தலைமையில் நடைபெற்றது.

பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் வசதியான சேவையை வழங்கும் நோக்கில் இந்த சிற்றுண்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதிப் குமார, சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த சிற்றுண்டி சாலை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தினை லங்கா சோலர் நிறுவனத்தின் தவிசாளர் றியால் தலைமையிலான குழுவினரினால் பொறுப்பேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.