
சம்மாந்துறை நீர்ப்பாசன காரியாலய முன்றலில் கவனயீர்ப்பு பேரணி
-கல்முனை நிருபர்-
நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும், ஆதாரவாகவும் நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன காரியாலய பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் கையில் பல்வேறு சுலோகங்களை ஏந்திக்கொண்டு ‘ விவசாயிகளின் குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்குமாறு கோரி கவனயீர்ப்பு பேரணி நேற்று நண்பகல் மதியபோசன நேரத்தில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன காரியாலய முன்றலில் இடம்பெற்றது.

