
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் இரு வாரமாக இடம்பெற்று வரும் பாடத்திட்டம் சாராத செயலமர்வுகள்
-நிதர்ஷன்-
சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியின் விவசாய டிப்ளோமா பாடநெறியின் 2024 ம் கல்வியாண்டில் உள்ளீர்க்கப்பட்ட மாணவர்களுக்கு இரு வாரமாக வளவாளர்களைக் கொண்டு பாடத்திட்டம் சாராத செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது .
பாடநெறியானது ஆங்கில மொழிமூலமானது.
மூவின மாணவர்களும் வகுப்பில் உள்ள நிலையில் தமிழ் மொழியிலேயே செயலமர்வுகள் நடைபெறுவதை வன்மையாக கண்டிப்பதாக விவசாய சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
கடந்த காலங்களில் 2018 தொடக்கம் இவ்வாறான நிலை இல்லை எனவும் இச்செயலமர்வால் எவ்வித பிரயோசனமும் இல்லை என சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த காலங்களில் மிகவும் திறமையாக நடைபெற்ற மாணவர் மத்தியிலே கேள்வி இருந்த பாடநெறியின் வலிமை குறைவடைந்து வருவதாக சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.மிகவும் பயிற்றப்பட்ட கல்லூரியின் வளவாளர்கள் உள்ள நிலையில் வெளியில் இருந்து பொருந்தாத வளவாளர்களை அழைத்து இவ்வாறு செயலமர்வுகளை நடாத்துவது தொடர்பாக தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என சங்கத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இச்செயலமர்வு தொடர்பாக எந்தவித அனுமதியையும் தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களம் வழங்கவில்லை என அதிஉயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூவின மாணவர்களும் உள்ள நிலையில் தமிழில் செயலமர்வு நடாத்துவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது என அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார்.
