சம்மாந்துறை தொழிற்கல்லூரி விவசாய பகுதித்தலைவர் செய்தி தொடர்பாக விளக்கம்

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் 2024 ஆம் கல்வியாண்டு விவசாய டிப்ளோமா மாணவர்களுக்கு இருவாரமாக தமிழ்மொழிமூலம் நடாத்தப்பட்டுவரும் விசேட பயிற்சி நடைபெறுகின்றது.

இந்த பயிற்சி தொடர்பில் விவசாயம் மற்றும் தொழிற்கல்வி பகுதித்தலைவரும், தொழில்நுட்பக்கல்வி சேவையின் அதிகாரியும், விரிவுரையாளருமான வரகுணராகவன் பின்வருமாறு கருத்து தெரிவித்தார் .

இருவாரப்பயிற்சி தமிழ்மொழியில் நடாத்தப்பட்டது உண்மை.இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.ஆங்கிலத்தில் இப்பயிற்சியை நடாத்தி இருந்தால் அது மாணவர்களுக்கு புரியாது. தமிழ்மோழிமூல மாணவர்கள் நூறுவீதம் நன்மையடைந்தனர்.

சிங்களமொழிமூல மாணவர்களுக்கு நான் தேவை ஏற்படும்போது ஆங்கிலத்தில் விளக்கமளித்தேன்.அவர்கள் விளங்கவில்லை என என்னிடம் கூறவில்லை.விவசாய சங்கம் என்னிடம் கேட்டிருந்தால் ஏன் தமிழ்மொழிமூலம் இப்பயிற்சியென விளக்கமளித்திருப்பேன் என்றார்.

மேலும் விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் பகுதித்தலைவர் வரகுணராகவன் எங்கள் சங்கத்துடனும், விவசாய மாணவர்களுடனும் ஒன்றுபட்டு செயற்படுபவர்.இனிவரும் காலங்களில் விமர்சனங்களை தவிர்ப்போம் என்றனர்.