சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியில் 77வது சுதந்திர தின நிகழ்வு!

 

-சம்மாந்துறை நிருபர்-

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் நிர்வாக தலைவர் ஐ.எம். இஸ்மாயீல் (தப்லீகி) தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தினால் மரணித்த மாணவர்களுக்காகவும், கல்லூரியின் முன்னாள் அதிபர், ஆசிரியர்களுக்காகவும் தூஆ பிராத்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அதிபர் எஸ். இஸ்மாயில் லெப்பை (தப்லீக்), கல்லூரியின் ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள்,மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரியின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்