சம்மாந்துறை செந்நெல் சாஹிறா வித்தியாலயத்தில் பாராட்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

 

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்-

செந்நெல் மறுமலர்ச்சியின் இரண்டாவது கட்ட செயல் அமர்வு செந்நெல் சாஹிரா மஹா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை  இடம் பெற்றது.

செந்நெல் மறுமலர்ச்சி செயற்திட்டத்தின் கீழ் அப் பாடசாலை மாணவச் செல்வங்களுக்கு பகுதிநேர வகுப்பில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்காக பல்வேறு வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று இடம்பெற்ற கூட்டத்தில் செந்நெல் மறுமலர்ச்சியினால் நடத்தப்பட்ட பகுதி நேர வகுப்பில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரண்டு பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அப்பியாச கொப்பிகளும் வழங்கப்பட்டது.

இதில் இந்நிகழ்வில் சமூக சேவைகளை முன்னெடுத்து வருகின்ற ஆஷிக் அத்தோடு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான் பகுதிநேர ஆசிரியர் தஸ்லீம் அத்தோடு பாடசாலையினுடைய பிரதி அதிபர் முபாரக் அலி sir என பலரும் கலந்து கொண்டனர்.