சம்மாந்துறையில் விழிப்புணர்வு கூட்டம்

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஞாயிற்றக்கிழமை மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் பயணம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், வாகனங்களை சட்டப்படி பதிவு செய்தல், சரியான ஆவணங்கள் வைத்திருத்தல், போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தல் மற்றும் தவிர்த்தல் என்பன பற்றி சாரதிகள் வலியுறுத்தப்பட்டன.

இக்கூட்டத்திற்கு சம்மாந்துறை பகுதியில் காணப்படும் சுமார் 100 வாகன சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.