
சம்மாந்துறையில் வயல் அறுவடை விழா
-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-
ஒருங்கிணைந்த தாவரப்போசணை முகாமைத்துவ பயிற்சியின் (𝐈𝐏𝐍𝐌) வயல் அறுவடை விழா நிகழ்வு விவசாய விரிவாக்கல் நிலைய சம்மாந்துறை பிராந்திய உதவிப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
பத்தாண்ட வட்டை ( ஆடைத் தொழிற்சாலை அருகாமையில்) இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மட் ஹனீபா கலந்து சிறப்பித்தார்.
