சம்மாந்துறையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் செயல்படும் நூலகங்களின் ஏற்பாட்டில் நடத்தப்படும் மாபெரும் புத்தகக் கண்காட்சி, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (18) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இக் கண்காட்சி எதிர்வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று தினங்கள் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள முடியும் என சம்மாந்துறை பிரதேச சபை அறிவித்துள்ளது.