சம்மாந்துறையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 07 பாடசாலைகளைச் சேர்ந்த 110 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி பங்களிப்பில் மலையடிக்கிராமம் அஸ்ஸமா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.அபூவக்கர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ வாஜீத் அலியின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வி.விஜயதாஸ்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஜே குறைசா,கிராம சேவகர் எப் சிஹ்னாஸ் பானூ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்