சம்மாந்துறையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத் திட்டம்!

-சம்மாந்துறை நிருபர்-

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாத் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை சந்தை தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் புகை வீசிறப்பட்டது

இந்நிகழ்வினை சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொண்டு இருந்தனர்.

மேலும் இந்நிகழ்விற்கு சம்மாந்துறை நலன்புரி சமூக சேவைகள் அமைப்பு அனுசரணை வழங்கிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர், சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.ஐ.எம். ஹனீபா மற்றும் சம்மாந்துறை நலன்புரி சமூக சேவைகள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.