சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் வியாழக்கிழமை சம்மாந்துறை குழந்தையின் சந்தி பிரதேசத்தில் மாலை வேளையில் சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை கருவாட்டுக்கல் 01 பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், சம்மாந்துறை, உடங்கா 02 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபர் நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 2500 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றவரிடம் இருந்து 1700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான சார்ஜன் அநுர, சார்ஜன் அசோக்க, பொலிஸ் உத்தியோகத்தர்களான யேகான், நிரஞ்சன்,உள்ளிட்ட அதிகாரிகள் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.