சம்மாந்துறையில் அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்-

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மதியம் அழுகி உருகுக்லைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலம் பாவிக்காமல் இருந்த வீடு ஒன்றின் 2 ஆம் மாடியில் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்த குறித்த நபரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 55 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் தனது சகோதரி ஒருவரின வீட்டில் தங்கி இருந்த நிலையில் காணாமல் போனார் என்றும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .