சம்மாந்துறையில் அனுரகுமார திஸாநாயக்கவின் கூட்டத்தில் பறந்த சர்ச்சைக்குரிய பறவை மீட்பு: இருவர் விசாரணைகளின் பின் விடுவிப்பு

 

சம்மாந்துறையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பறந்த பறவை மீட்கப்பட்டதுடன் இதன் போது நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடையவர்களே இதன்போது கைது செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க பேசிக்கொண்டு இருக்கும் போது மேடையை அண்மித்த வானத்தில் இருந்து சிவப்பு நிற மின்னொளி பாய்ச்சப்பட்டு ஏதோவொரு மர்மபொருள் நகர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் இக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய மேடையில் இருந்து சிறிது நேரம் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டார்.

இது தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் நடாத்திய விசாரணைகளின் போது  LED LIGHT   பொருத்திய ‘புறா’ பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன் கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து புறா வளர்ப்பில் ஈடுபடும் இரு இளைஞர்களை விசாரணை செய்த போது சமூக ஊடகங்களில் காணொளியை பதிவு செய்வதற்காக இரவு வேளையில் காலில் எல்.ஈ.டி லைட் எனப்படும் ஒரு வகையான மின் விளக்கினை பறவையின் காலில் பொருத்தி இரவு வேளையில் அதனை தினமும் பறக்க விடுவது என அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரையும்  சம்மாந்துறை பொலிஸார் எச்சரிக்கை செய்து  விடுதலை செய்ததுடன்  சம்பவம்  தொடர்பில்  மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்