சம்மாந்துறையின் வெள்ள நிலவரம் தொடர்பான அறிவித்தல்!

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட நைனாகாடு பிரதேசத்தில், சுமார் 25 குடும்பங்களை, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம் தெரிவித்துள்ளார்.

நைனாகாடு சாவாறு (பனையடி இறக்கம்) உடைப்பெடுத்துள்ளமையினால், பள்ளாறு வீதியில் வெள்ளம் பரவ ஆரம்பித்துள்ளது.

அத்துடன், மாவடிப்பள்ளி வீதியில் பயணம் செய்பவர்கள் அவதானமாக செல்லுமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

சேனநாயக்கா சமுத்திரத்தில் இருந்து திறக்கப்பட்ட நீர்,  தற்போது சம்மாந்துறை தாழ்நிலப் பகுதிகளில் வந்துள்ளமையால், தாழ்நிலப் பகுதியில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்,  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்