சம்மாந்துறையின் புதிய கோட்டக் கல்வி பணிப்பாளராக எம்.டி.ஜனுபர் பொறுப்பேற்பு!
சம்மாந்துறை கோட்டக் கல்வப் பணிப்பாளராக எம்.டி. ஜனுபர் (SLEAS) நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில், சம்மாந்துறை பிரதி கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், முன்னிலையில் அவர் தனது பணியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
சம்மாந்துறை வலயத்தின் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த உறுதுணையாக இருப்பேன் என அவர் உறுதியளித்தார்.
அவரது இந்த நியமனம், சம்மாந்துறை வலயத்தின் கல்வி சமூகத்தினரிடையே பெரும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்வி வலயத்தின் வளர்ச்சிக்கு புதிய பாதையை அமைக்கும் வகையில் அவரது பணிகள் அமையும் என நம்பப்படுகிறது.