
சம்மாந்துறையில் விபத்து
சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்திலிருந்து இரத்தினபுரிக்கு அரிசி ஏற்றி சென்ற கனரக வாகனம் நெய்னாகாடு பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள திராவோடை வீதியில் வாகனம் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
