
சம்பூர் விபத்தில் இளைஞன் பலி
-மூதூர் நிருபர் –
திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சீதனவெளிப் பகுதியில் ரிப்பர் வாகனம் மோதி இளைஞரொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர் .
பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சீதனவெளிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை பகல் இடம் பெற்ற சம்பவத்தில் சம்பூர்- சீதனவெளி பகுதியைச் சேர்ந்த வி.விதுஷன் (வயது-18) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாகவும், சடலம் மூதூர் தள வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கால்நடைகள் பராமரிப்பவர் என தெரியவருகிறது.
அதேவேலை ரிப்பர் வாகனத்தை செலுத்துவந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

