சம்பூரில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்-

சர்வதேச வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு மீள்குடியேற்ற அமைச்சினால் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூரில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட மூன்று வீடுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

இவ் வீடு தலா 1 மில்லியன் ரூபாய் செவில் நிமாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் வீடுகளை திறந்து வைத்தார்.இதன்போது குறித்த வீட்டு வளாகத்தில் பயன்தரும் மரக் கன்றுகளும் நடப்பட்டன.

இந்நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், மூதூர் பிரதேச செயலளார்,மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.