சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினை – தம்பலகாமம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு
-கிண்ணியா நிருபர்-
MN5 சம்பள அளவுத் திட்டம் மற்றும் விசேட தரத்துடன் கூடிய பதவி உயர்வு முறை உள்ளிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கூடிய கவனயீர்ப்பு ஒன்று இன்று திங்கட்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதனை அரச மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை நிறுவி MN5 சம்பள அளவு விசேட பதவி உயர்வு முறையை வழங்க கோரியும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.