
சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்
நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இந்த சந்திப்பின் போது ஆளுநனின் துணைவியாரும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் இந்த சந்திப்பின் போது தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
