சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை மாதம் 33,000 மெட்ரிக் டன் எரிவாயுயை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆகவே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலிருந்து நாட்டின் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான வரிசை குறைவடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை 6,10,15,22,24 ஆகிய திகதிகளில் தலா 3,500 மெட்ரிக் டன் வீதம் ஐந்து எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

மேலும், எதிர்வரும் ஆறாம் திகதியின் பின்னர், 120,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாகவும், அதற்கமைய நாள் ஒன்றுக்கு 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.