
சமூக வலைத்தள காதலனை தேடி வீட்டை விட்டு சென்ற 12 வயது சிறுமி
12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்த இளைஞனைத் தேடி வீட்டை விட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
முல்லைத்தீவு, மூங்கிலாறு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவி சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்த இளைஞனைத் தேடி வீட்டை விட்டு சென்று விட்டதாக குறித்த சிறுமியின் தந்தை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வீட்டில் இருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியையும் எடுத்துக்கொண்டு, தான் வீட்டை விட்டுச் செல்வதாக கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டுச் சென்று விட்டதாகவும், குறித்த கடிதத்தில் அவளைத் தேட வேண்டாம் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாகவும், சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகம் ஒன்றின் ஊடாக தனக்கு அறிமுகமான இளைஞன் ஒருவரை சந்திப்பதற்காக குறித்த சிறுமி ஹட்டனுக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியைத் தேடி அவரது தந்தை மற்றும் உறவினர்கள் சென்றுள்ளதாகவும், புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
