சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக விழிப்பணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் தொடர்பான கூட்டம்

-மஸ்கெலியா நிருபர்-

நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  திரு சாந்த பண்டார தலைமையில் சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக விழிப்பணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் தொடர்பான கூட்டம் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரதேசத்தில் காணப்படும் பொலிஸ் சேவைகளின் மூலம் தீர்வுக்காணப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளப்பட்டதுடன் போதை பொருள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகவும் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரைவில் சில நடவடிக்கைகளுடன் சமூக பாதுகாப்பு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.