சமூக நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மற்றும் அநுராதபுர மாவட்ட செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மற்றும் அநுராதபுர மாவட்ட கலைஞர்களுக்கிடையேயான சமூக நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கலைஞர்களுக்கிடையேயான சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் .

கலைக்கு இன, மத பேதம் கிடையாது. அனைவரும் அதனை ரசிக்க முடியும் என இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவி்த்தார்.

இந்நிகழ்வில் 150 இற்கும் மேற்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞர்கள் கலந்து கொண்டமை இதன் சிறப்பம்சமாகும்.

இரு மாவட்டங்களையும் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லீம் கலைஞர்களின் கலாசார நடனம், பாடல், கதை,  நாடகம்,  கவிதை போன்ற பலவகையான நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்தது மட்டுமன்றி எல்லோரின் மனதிலும் நீங்கா இடத்தையும் பிடித்தது.

இந்நிகழ்வில் திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், அநுராதபுர மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சாமில விக்கிரம ஆராய்ச்சி, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன்,  இரு மாவட்டங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள்,  கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்