சமூக ஊடகம் மூலம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞர் கைது!

சமூக ஊடகம் மூலம் ஒருவரிடமிருந்து 500,000 ரூபாய் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில், 22 வயதுடைய இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

திகன பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி, குறித்த பண மோசடி இடம்பெற்றுள்ளது.

வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.