சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா கைது!
சமூக ஆர்வலர் பியத் நிகேஷலா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனை நேரலையில் ஒளிபரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக குறித்த செயற்பாட்டாளர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்