சமிக்கையை மீறி சென்ற டிப்பர் மீது துப்பாக்கி சூடு
கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வாகனத்தை தருமபுர பொலிசார் வீதி சோதனை இட முற்பட்ட பொழுது சமிக்கையை மீறிச் சென்ற டிப்பர் மீது
குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் சம்பவத்தில் டிப்பரின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்புடைய டிப்பர் சாரதி தப்பி ஓடி உள்ளார்.
சம்பவம் தொடர்பாகன மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
