சமரி அத்தப்பத்துவுக்கு காயம்
மகளிர் உலக கிண்ணத் தொடரின் இன்றைய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து காயமடைந்துள்ளார்.
அவரது வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியர்களின் ஆலோசனையின் படி மைதானத்தில் இருந்து வௌியேறினார்.
மகளிர் உலக கிண்ண தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (11) மோதுகின்றன .
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இந்நிலையில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
254 என்ற வெற்றியிலக்கை நோக்கி துரத்தும் இலங்கை அணி அதன் 5.3வது ஓவரை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்துவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதன் விளைவாக, இலங்கை பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஊழியர்கள் அவரை மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.