சமன் ஏக்கநாயக்க இன்று சிஐடியில் ஆஜராகிறார்
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று (01) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு சமன் ஏக்கநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைக்களுக்கு அமைய வாக்குமூலம் பெற இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சமன் ஏக்கநாயக்க ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
