சப்பாத்திக்கள்ளி பழத்தின் அறியப்படாத வரலாறும் நன்மைகளும் என்ன?
சப்பாத்திக்கள்ளி பழம் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் நிரம்பிய தாவர பொக்கிஷம்.
பண்டைய காலத்திலிருந்து பல்வேறு கலாசாரங்களில் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும்இ மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தில் கூட அதன் பல நன்மைகள் ஆராய்ச்சிகளில் வெளிப்படுகின்றன.
இதை எகிப்தில் ‘டின் ஷூகி’ என்று அழைக்கின்றனர். அதேசமயம் கிழக்கு அரபு நாடுகளில் ‘சபார்’ அல்லது ‘சபர்’ என்று அழைக்கின்றனர்.
சப்பாத்திக்கள்ளி பழங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறங்களில் உள்ளன.
சில பச்சைஇ சில மஞ்சள்இ சில சிவப்புஇ சில ஊதா நிறத்திலும் இருக்கின்றன. இந்த பழங்களின் சுவை அல்லது ருசியும் வேறுபடுகிறது.
மஞ்சள் நிற சப்பாத்திக்கள்ளி பழம்இ சிவப்பு நிற பழங்களை விட அதிக சுவையாக இருப்பதாக எகிப்தில் பழத்தை விற்கும் சய்யத் சொல்கிறார்.
சப்பாத்திக்கள்ளி வரலாறு
சப்பாத்திக்கள்ளி பழமும் தாவரமும் பண்டைய காலங்களில் இருந்து குறிப்பாக மத்திய அமெரிக்காவிலும்இ மெக்ஸிகோவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வரலாற்றின்படிஇ சப்பாத்திக்கள்ளி அஸ்டெக் மக்களின் கலாசாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
அஸ்டெக் கலாசாரம் கி.பி. 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது.
அஸ்டெக் ராணுவக் கொடியில் வாயில் பாம்புடன் சப்பாத்திக்கள்ளியின் மீது கழுகு அமர்ந்திருக்கும்.
அவர்களின் தலைநகரம் ‘டெனோச்சிட்லான்’ என்று அழைக்கப்பட்டது. இதன் பொருள் ‘கல்லில் வளர்ந்த சப்பாத்திக்கள்ளி’ ஆகும்.
மெக்ஸிகோவில் உள்ள அஸ்டெக் மக்கள் சப்பாத்திக்கள்ளி பழத்தை ‘டெனோஷ்ட்லி’ என்று அழைத்தனர்.
கி.பி. 1492 வரை ஐரோப்பியர்களுக்கு சப்பாத்திக்கள்ளி பழத்தைப் பற்றி தெரியாது. கரீபியன் கடலில் உள்ள ஹிஸ்பானியோலா தீவின் மீது (இப்போது ஹைட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு) ஸ்பானிஷ் மக்கள் படையெடுத்தபோது, அங்குள்ள உள்ளூர் மக்கள் இந்த பழத்தை அவர்களுக்கு அளித்தனர்.
அப்போது உள்ளூர் மக்கள் இந்த பழத்தை ‘ட்யூன்’ என்று அழைத்தனர். என்று எஃப்ஏஓ ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஸ்பானிஷ் மக்கள் சப்பாத்திக்கள்ளியை ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர்இ பின்னர் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது மத்தியதரைக் கடல் கரையிலும் வட ஆப்ரிக்காவிலும் பரவியது.
பதினெட்டாம் நூற்றாண்டில் சப்பாத்திக்கள்ளி தெற்கு ஆப்ரிக்காஇ இந்தியா மற்றும் சீனாவிற்கு பரவியது.
பயன்கள்
- சப்பாத்திக்கள்ளி பழத்தை அதிக அளவில் உணவில் சேர்த்தால்இ இதய நோய்கள் (கொரோனரி ஆர்டரி நோய்) மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
- இந்தப் பழத்தில் உள்ள நார்ச்சத்து (ஃபைபர்) உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. மேலும், இந்த பழங்களை தொடர்ந்து உண்பதால் ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் செயல்பாடு மேம்படுகிறது.
- FAO ஆய்வின்படி இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும்இ சோடியம் குறைவாகவும் உள்ளது. இதனால் சிறுநீரக நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- சப்பாத்திக்கள்ளி பழம் டைப்-2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கிறார் உணவியல் நிபுணர் மஜித் அல்-கதிப்.
பிற பயன்கள்
- பணடைய காலம் முதலே நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் காயங்களை குணப்படுத்தவும் சப்பாத்திக்கள்ளி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இது சோப்புஇ ஷாம்பு மற்றும் லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சப்பாத்திக்கள்ளியைப் பயன்படுத்தி தாவர பசைகள் மற்றும் நிறமிகளும் தயாரிக்கப்படுகின்றன.
- மெக்ஸிகோ போன்ற சில சமூகங்களில்இ சப்பாத்திக்கள்ளியின் இலைகள் (பேடில்ஸ்) உண்ணப்படுகின்றன. இந்த இலைகளை வெட்டி பொரித்துஇ மசாலா சேர்த்து அல்லது நெய்யில் பொரித்து அல்லது சீஸ் சேர்த்து உண்ணப்படுகிறது.
- சப்பாத்திக்கள்ளி விலங்குகளுக்கான தீவன உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது.
சப்பாத்திக்கள்ளி பழத்தினால்கிடைக்கும் பயன்களைப் பெறுங்கள்.