சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – பொதுஜன பெரமுன அறிவிப்பு!

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்துள்ளதாகப் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகர் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளதாகக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளார், எனவே சபாநாயகர் கல்வித் தகைமையைக் காட்டி மக்களை ஏமாற்றியிருந்தால் அவர் பதவி விலக வேண்டும்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றக் குழுவின் ஊடாக சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.

இதற்கு முழு எதிர்க்கட்சியினரும், அரசாங்கத்தின் மனசாட்சியுள்ள உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.