
சபாநாயகரின் பதவி விலகல் தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
சபாநாயகர் பதவியிலிருந்து அசோக சபுமல் ரன்வல உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
10ஆவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வின் போது சபாநாயகராக கம்பஹா மாவட்ட உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த சர்ச்சை காரணமாக அவர் பதவி விலகினார்.
அத்துடன், தமது கல்வி தகைமையை உறுதிப்படுத்தும் வரை குறித்த பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் அறிவித்தார்.
இந்த நிலையிலே, அசோக சபுமல் ரன்வல கடந்த 13 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் உத்தியோகப்பூர்வமாகப் பதவி விலகியுள்ளதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
