சந்தை கட்டடம் திறப்பு
வலிகாமம் பிரதேச சபைக்கு உட்பட்ட சத்தியக்காடு மீன், கோழி இறைச்சி மற்றும் கருவாட்டு சந்தை கட்டட தொகுதியானது இன்று வியாழக்கிழமை, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாகா நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டட தொகுதிக்கான அடிக்கல்லானது கடந்த 2022.02.07 அன்று கௌரவ தவிசாளர் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது. இந்நிலையில் கட்டட வேலைகள் பூர்த்தியாகிய நிலையில் இன்று வியாழக்கிழமை கட்டடமானது திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
ரூபா 10.91 மில்லியன் செலவில் பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் இந்த கட்டடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-யாழ் நிருபர்-
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்