சந்தையில் தரமற்ற எரிபொருள்

சில ஊடகங்களில் பெற்றோல், டீசல் தொடர்பில் வெளியிடப்படும் போலியான செய்திகள் குறித்து ஏமாற வேண்டாம் எனவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் கொள்முதல் கட்டளை செய்யப்பட்ட டீசல் பெற்றோல் தொடர்பான சிறப்பு அறிவிப்பையும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, 92 வகை டீசல் மற்றும் பெற்றோல் இருப்புடன் எம்.டி. ஃபோஸ் பவர் கப்பல் கடந்த 5 ஆம் திகதி அதிகாலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையில் 92 வகை பெற்ரோல் பாவனை தரநிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை தரையிறக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

டீசல் கையிருப்பு சோதனை இன்னும் நடந்து வரும் நிலையில், சோதனையின் பின்னர் அவற்றின் தரம் நிலை மதிப்பிடப்பட்டு, அதன் பின் தரையிறக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படுமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்