
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு: இறக்குமதி செய்ய நடவடிக்கை
சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் பண்டிகை காலத்துக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாரிய ஆலை உரிமையாளர்கள் அரிசியினை மறைத்து வைத்திருப்பதால் தற்போது சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த அரிசி ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் பண்டி காலத்தின் போது சதொச ஊடாக நுகர்வோருக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
