சந்தேகநபரான சீன பிரஜையை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கொஹுவலை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் 23ஆம் திகதி சீனப் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக, இறந்த பெண்ணின் முன்னாள் காதலன் என்று நம்பப்படும் சீன சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் விபரங்கள் –

பெயர்:- வாங் ஹுயின்
பிறந்த திகதி:- 2000.06.01
கடவுச்சீட்டு எண்:- EE6791329/ER3805969
ஏனைய தகவல்கள்:- சந்தேக நபரின் இடது கை விரல்களில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி எண்கள் –

பொலிஸ் நிலைய அதிகாரி/பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் – கல்கிஸ்ஸை – 071-8596408
பொலிஸ் நிலைய அதிகாரி/கொஹுவலை – 071-8591669