சந்தேகத்திற்கிடமான காட்சிகளை ஊடகங்களில் வெளியிடுவதை நிறுத்துமாறு வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீடியோ காட்சிகளை வெளியிடுவதை நிறுத்துமாறு தொழில்முறை வலை ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற செயற்பாடுகள் குற்றவியல் நீதி அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் என்றும் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அவர்களிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் அல்லது ‘குரல் வெட்டுக்கள்’ வலுக்கட்டாயமாக பிரித்தெடுக்கப்படுவது மற்றும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் இந்த கிளிப்கள் பின்னர் பரப்பப்படுவது குறித்தும் அந்த சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் நீதித்துறையில் மீது அவமதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.