சத்திர சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து: குழந்தை மரணம்!

பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்போது சத்திரசிகிச்சைக்காக மயக்க மருந்தினை உட்செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதற்கமைய உட்செலுத்தப்பட்ட மயக்க மருந்து காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், முன்னதாக இரண்டு தடவைகள் குறித்த வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணும் இவ்வாறு உயிரிழந்தனர்.

வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருந்தாளர் சங்க தலைவர் துஷார ரணதேவ வலியுறுத்தியுள்ளார்.