சதொச ஊடாக 145 ரூபாவிற்கு அரிசி விற்பனை
இந்திய கடன் உதவி மூலம் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெற்றிக் தொன் அரிசியை இன்று முதல் நாடளாவிய ரீதியில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதன்படி,
1கிலோ வெள்ளைப்பச்சை அரிசி 145 ரூபாவிற்கும்
1கிலோ நாட்டு அரிசி 145 ரூபாவிற்கும்
1கிலோ சம்பா அரிசி 175 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது