சதொச ஊடாக தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசுக்கு சொந்தமான  தோட்டங்களில் உள்ள தேங்காய்களை நகர்ப்புற மக்களுக்கு 130 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் இதற்காக பத்து இலட்சம் தேங்காய்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 220 ரூபாய் விலையில் இரண்டு இலட்சம் கிலோ கிராம் அரிசியை நாளொன்றுக்கு விடுவிப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்