சதுரங்க கிராண்ட்மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி காலமானார்

அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டரும், வர்ணனையாளருமான டேனியல் நரோடிட்ஸ்கி தனது 29ஆவது வயதில் காலமானார்.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

நரோடிட்ஸ்கி, 2007 ஆம் ஆண்டு துருக்கியின் அன்டால்யாவில் இடம்பெற்ற 12 வயதுக்குப்பட்டோருக்கான உலக இளைஞர் செம்பியன்ஷிப்பை தன்வசப்படுத்தி முதன் முறையாக சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.

அத்துடன், 2010 ஆம் ஆண்டில், தமது 14ஆவது வயதில், எழுதிய நூலின் மூலம், அவர் மிகவும் இளமையான சதுரங்க எழுத்தாளர்களில் ஒருவரானார்.

இதனையடுத்து 2013ஆம் ஆண்டில், நாரோடிட்ஸ்கி அமெரிக்க ஜூனியர் செம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டதுடன் கிண்ணத்தையும் சுவீகரித்தார்.