சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி!

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சந்தேகநபர் வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.