சதத்தை மகளுக்கு அர்பணித்த கே.எல். ராகுல்
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கியது.
இதற்கமைய தமது முதாலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாவிடிய கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இது அவரின் 11-வது டெஸ்ட் சதமாகும்.
சதம் விளாசிய கேஎல் ராகுல் சதத்தை தனது மகளுக்கு அர்பணிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.