
சண் தவராஜா எழுதிய “காணாமல் போனவர்கள்” நூல் அறிமுக நிகழ்வு
ஊடகர் மற்றும் எழுத்தாளர் சண் தவராஜா எழுதிய “காணாமல் போனவர்கள்” நூலின் அறிமுக நிகழ்வு அண்மையில் சுவிஸ் நாட்டின் பேர்ண் நகரில் நடைபெற்றது.
ஊடகர் தா.வேதநாயகம் தலைமையில் பேர்ண் சைவநெறிக் கூட மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் தா.பாலகணேசன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் குடத்தனை உதயன் அறிமுக உரையும், ஆற்ற எழுத்தாளர் கங்கை மகன் சிறப்புரையும் நிகழ்த்தினார்கள்.
பாவலர் மணி ரூபா அன்ரன் கவி வாழ்த்து பாடினார், எழுத்தாளர் விக்கி நவரட்ணம் நன்றியுரை நிகழ்த்தினார்.
பாசல் செந்தமிழ்ச் சோலை நிர்வாகிகளான தர்மராஜா பத்மஜனதேவி தம்பதிகள், நூலின் முதல்பிரதியைப் பெற்று நூலை வெளியிட்டு வைத்தனர்.
நூல் அறிமுக நிகழ்வின் இரண்டாம் அங்கமாக நடைபெற்ற காணாமல் போனவர்கள் என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்க நிகழ்வில், ஊடகர், கவிஞர் க.அமரதாஸ், உமையொருகூறா சிவாஜினி இராஜ்கண்ணா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
காணாமல் போனவர்கள், சண் தவராஜாவின் இரண்டாவது சிறுகதை நூல் ஆகும், இவர் இதுவரை ஐந்து நூல்களை வெளியீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




