அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் வசதி இல்லாத இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சீட் பெல்ட் பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பின்புற இருக்கையில் இரண்டு சீட் பெல்ட்கள் மட்டுமே இருந்தால், அந்த இருக்கையில் இரண்டு பயணிகள் மாத்திரமே பயணிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது பயணி சீட் பெல்ட் இல்லாமல் நடுவில் அமர்ந்து பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.










