
சட் ஜி.பி.ரியில் ப்ளீஸ், தேங் யூ கூற வேண்டாம்: அதிகம் செலவாகின்றது
சமீபத்தில், ஓபின் ஏ.ஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் எல்ட்மேன் கூறிய ஒரு கூற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்ஜிபிரியின் ஏ.ஐ சாட்போட்களுக்கு “தயவுசெய்து” மற்றும் “நன்றி” என்று பணிவுடன் கூறுபவர்களால் தனக்கு நிறைய செலவாகிறது என்று சாம் எல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
ஓபன் ஏ.ஐ துறையைப் பொறுத்தவரை இப்போது செட்ஜிபிடி தான் முன்னிலை வகித்து வருகிறது.
ஏ.ஐ துறையில் அவர்கள் கொண்டு வரும் அப்டேட்ஸ்கள் பயனாளர்களை கவரும் வகையில் கொண்டு வரப்படுகிறது. இதனால் செட்ஜிபிடி பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேநேரம் பயனாளர்கள் செய்யும் சில வேலைகளால் செட் ஜிபிடியின் செலவும் அதிகரித்து வருகிறதாம்.
இந்நிலையில், நாம் செட் ஜிபிடியிடம் பொதுவாகக் கேள்விகளுடன் சேர்த்து அனுப்பும் ப்ளீஸ் மற்றும் தேங் யூ உள்ளிட்ட வார்த்தைகளால் செட்ஜிபிடிக்கு பல மில்லியன் டொலர் செலவாவதாக ஓபன் ஏஐ தலைவர் சாம் எல்ட்மேன் தெரிவித்துள்ளார்.மேலும், பதில்கள் தருவது இயந்திரம் என்பதால் அதற்கு ப்ளீஸ் மற்றும் தேங் யூ போன்ற மரியாதைகள் தேவையில்லை.
இதற்கென குறிப்பிட்ட மின்னாற்றல் தேவைப்படுவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்